சிம்பு படத்தில் இணைந்த டீஜே - சிம்புவின் 'பத்து தல' படத்தில் நடிக்க ஒப்பந்தம்
பதிவு : ஜனவரி 07, 2021, 02:35 PM
மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு "பத்து தல" என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு "பத்து தல" என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இதில் நடிகர் டீஜேவும் இணைந்துள்ளார். ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமடைந்த டீஜே, அசுரன் படத்தின் தனுஷின் மகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான மாஸ்டர் பட ப்ரோமோ - "முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்"

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக வெளியான டீசரில் விஜய் வசனம் எதுவும் பேசாத நிலையில், தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் பஞ்ச் வசனங்கள் பேசியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தனுஷ் படத்தில் இணைந்த ஸ்மிருதி வெங்கட் - கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ள நிலையில், தற்போது, நடிகை ஸ்மிருதி வெங்கட் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர், தடம், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

காடன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு - மார்ச் 26ல் வெளியாகும் ராணாவின் 'காடன்'

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி உள்ள காடன் திரைப்படம் மார்ச் மாதம் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காடுகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

பீட்சா-3 படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பீட்சா. இதன் அடுத்த பாகம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், இதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. "பீட்சா-3 தி மம்மி" என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் அஷ்வின், ரவீணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட சமந்தா

நடிகை சமந்தா தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. சமந்தா தற்போது விஜய் சேதுபதி. நயன்தாரா நடிக்கும் காத்து வாக்கல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

ஆஸ்கர் நோக்கி... சூர‌ரைப்போற்று

ஆஸ்கர் விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது சூர‌ரைப்போற்று திரைப்படம்.. இந்த சூழலில் ஆஸ்கர் விருது குறித்தும், அதை வெல்ல சூர‌ரைப்போற்று திரைப்படம் கடக்க வேண்டிய தொலைவு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

200 views

ஓ.டி.டி-ல் வெளியாகும் விஜய்யின் "மாஸ்டர்"

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

20 views

"கர்ணன் - அனைத்தும் கொடுப்பான்" : அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயண‌ன்

கர்ண‌ன் திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போனதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன் கூறியுள்ளார்.

19 views

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

74 views

GODZILLA VS KONG டிரெய்லர் வெளியீடு - சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் GODZILLA VS KONG எனும் ஆங்கிலத்திரைப்படம் வெளியாக உள்ளது.

31 views

நவ. 4-ம் தேதி அண்ணாத்த வெளியீடு - விஜய்யின் தளபதி 65 வெளியாகுமா..?

ரஜினியின் அண்ணாத்த படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.