"மாஸ்டர் பொங்கல் அல்ல, விஜய் தி மாஸ்டர் பொங்கல்" - கொண்டாட்டத்திற்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்

முதலமைச்சரை நடிகர் விஜய் சந்தித்து வந்த‌து முதல் மாஸ்டர் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டுகள் பறக்கத்தொடங்கி விட்டன. சந்திப்பில் என்ன நடந்த‌து...
மாஸ்டர் பொங்கல் அல்ல, விஜய் தி மாஸ்டர் பொங்கல் - கொண்டாட்டத்திற்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்
x
விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் தென்னிந்தியாவில் தான் ரிலீசாகும்... மிஞ்சிப்போனால், மும்பையில் தமிழர்கள் வாழும் ஒரு சில பகுதிகளில் வெளியாகும்... ஆனால், மாஸ்டர் திரைப்படம், விஜய் தி மாஸ்டர் என்ற பெயரில் இந்தியிலும் டப் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது...  

மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த‌து. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளால், ரிலீஸ் தள்ளிப்போனது...

இந்த நிலையில் சூர‌ரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகி திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சியடைய செய்த‌து. இதனால், மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், கட்டாயம் திரையரங்குகளில் தான் படம் வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக கூறி வந்த‌து. 

இத்தகைய சூழலில் தான்,  திடீரென தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் விஜய்... அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், 50 சதவீத இருக்கை அனுமதிப்பதால் திரையரங்கு உரிமையாளர்களுக்க நஷ்டம் ஏற்படுவதாக விஜய் எடுத்துக்கூறியதாக தெரிகிறது. மேலும், திரையரங்குகளில் சிறப்பு காட்சி மற்றும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் விஜய் கோரிக்கை விடுத்த‌தாக கூறப்படுகிறது. 

இதன் எதிரொலியாக, ஜனவரி 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இந்த தகவலை வெளியிட்டார். மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம், நாளை பிற்பகல் 12.30 மணிக்கு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.இந்த நற்செய்தியை கேட்டு மாஸ்டர் பொங்கலுக்கு தயாராகிவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்...



Next Story

மேலும் செய்திகள்