இளையராஜாவின் வாழ்வில் பின்னி பிணைந்த பிரசாத் ஸ்டூடியோ - மோதலால் ஸ்டூடியோவை காலி செய்த இளையராஜா

இளையராஜா வாழ்வில் பின்னிப்பிணைந்த பிரசாத் ஸ்டூடியோவை இளையராஜா காலி செய்திருக்கிறார்.
இளையராஜாவின் வாழ்வில் பின்னி பிணைந்த பிரசாத் ஸ்டூடியோ - மோதலால் ஸ்டூடியோவை காலி செய்த இளையராஜா
x
தமது இசையால் பலரை ஈர்த்த இளையராஜா, கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு அரங்கை தான்  பயன்படுத்தி வந்தார். தினமும் காலை 7 மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டு இரவு தான் இல்லம் திரும்புவார், தமது குடும்பத்தையும் தாண்டி அதிக நேரம் இளையராஜா செலவழித்தது இங்குதான்.

சாதாரண இடமாக இருந்த ஸ்டூடியோவை இளையராஜா கோயிலாக மாற்றியுள்ளார் என்று ஒரு விழா மேடையில், ஸ்டூடியோ நிர்வாகி ரமேஷ் பிரசாத்தே பேசியிருந்தார். இந்த நிலையில், நிர்வாகம் எல்.வி.பிரசாத்தின் பேரனான சாய் பிரசாத் கைக்கு செல்ல, அரங்கை காலி செய்ய கூறப்பட்டது. இதனால், மோதல் வலுத்தது. இளையராஜா நீதிமன்றத்தை நாடிய நிலையில், இறுதியில், அறையை காலி செய்து கொள்வதாகவும், தியானம் செய்ய ஒரு நாள் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். இதை அடுத்து தியானம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. 

ஆனால், பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பூஜை அறை போல பாவித்து வந்த தனி அறை முற்றிலும் தகர்க்கப்பட்டதாகவும், இதனைஅறிந்து, இளையராஜா மனம் உடைந்து விட்டதாக, அவரது வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.  

ஆனால், பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் வழக்கறிஞர்  சலீம், இளையராஜாவின் தனி அறை ஐடி ரூமாக மாற்றப்பட்டுவிட்டது என ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டதாகவும், அனைத்து பொருட்களும் பாதுகாப்புடன் ஒப்படைத்து விட்டோம், அதற்கான வீடியோ ஆதாரமும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இறுதியில், நீதிமன்றத்தில் தெரிவித்தபடி நேரில் வந்து தியானம் செய்யாமல் உதவியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு அங்கிருந்து  160 பெட்டிகள் மற்றும்  ஏழு பீரோக்கள் என அனைத்தையும் 2 லாரிகள் மூலம் மொத்த பொருட்களையும் காலி செய்துள்ளார் இளையராஜா... Next Story

மேலும் செய்திகள்