"ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து பிற்பகலில் முடிவு" - மருத்துவமனை வட்டாரம் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்று பிற்பகலில் முடிவு தெரியும் என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளன.
ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து பிற்பகலில் முடிவு - மருத்துவமனை வட்டாரம் தகவல்
x
நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று முன்தினம் காலை, ஐதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட முதல் அறிக்கையில், ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்றாலும், அவரது ரத்த அழுத்தத்தில்  மாறுபாடுகள் இருந்தன என்றும், அவருக்கு பரிசோதனை தேவைப்படுவதால், மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்தை யாரும் சந்திக்க முடியாது என்பதால் யாரும் அவரை பார்க்க வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்று பிற்பகலில் முடிவு தெரியும் என மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்