திரை வாழ்வில் புதிய உச்சம் தொட்ட நடிகர் தனுஷ்

உலகைக் கலக்கிய அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களுடன் நடிகர் தனுஷ் கை கோர்த்திருக்கிறார். தனுஷின் திரை வாழ்வில் இது புதிய உச்சம் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திரை வாழ்வில் புதிய உச்சம் தொட்ட நடிகர் தனுஷ்
x
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளிலும் 
ரகிட ரகிட என கலக்கிக் கொண்டிருக்கிறார், நடிகர் தனுஷ்...

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக திகழும் தனுஷ், ராஞ்சனா மற்றும் ஷமிதாப் படங்களின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் முத்திரை பதித்தார். 

இதே துடிப்பும், வேகமும் தி எக்ஸ்ட்ராடினரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir) படத்தின் மூலம், ஹாலிவுட்டில் அவர் களமிறங்க கைக்கொடுத்தது.    

மீண்டும் அட்ராங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன் என தமிழிலும், தனுஷ் படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்