நடிகர் சிபி சத்யராஜ் நடிக்கும் 'கபடதாரி' படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு

நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சிபி சத்யராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு
x
நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில், நந்திதா, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார்.

ஜங்கிள் படத்தின் டீசர் வெளியீடு - தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் 'ஜங்கிள்'

நடிகர் ஆதி மற்றும் வேதிகா நடித்துள்ள ஜங்கிள் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர்கள் கார்த்திக் மற்றும் விக்னேஷ் இணைந்து இயக்கியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்த படம் வெளியாக உள்ளது. ஜோஷ் பிராங்க்ளின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வெளியானது அதர்வாவின் 'குருதி ஆட்டம்' டீசர் - யுவன் இசையில் மிரட்டலான டீசர்

8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் குருதி ஆட்டம்.. தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மதுரையை கதைக்களமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக் நடித்துள்ளார்.

'ஈஸ்வரன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்...டிசம்பர்-14-ம் தேதி வெளியீடு

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மறுநாள் வெளியாகும் என்று ஈஸ்வரன் படக்குழு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக, சிம்பு டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ஈஸ்வரன் படத்தின், பர்ஸ்ட் சிங்கிள் டிசம்பர் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அவர் கூறி உள்ளார்.

விஜய் ரசிகர்களின் 'வெறித்தனம்' - 110 மில்லியன் பார்வைகளை பெற்ற பிகில் பட பாடல்

நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்றிருந்த "வெறித்தனம்" பாடல் 110 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. நடிகர் விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். தற்போது இந்த பாடல் 9 லட்சம் லைக்குகளையும் நெருங்கி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்