"வலிமை படத்தின் அப்டேட் கொடுங்கள்": தொடர்ந்து நச்சரித்த அஜித் ரசிகர்கள் - இறுதியாக மவுனம் கலைத்த படக்குழு

ரசிகர்களின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
வலிமை படத்தின் அப்டேட் கொடுங்கள்: தொடர்ந்து நச்சரித்த அஜித் ரசிகர்கள் - இறுதியாக மவுனம் கலைத்த படக்குழு
x
ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்துவரும் படம் வலிமை...அஜித்தின் 60-ஆவது படமான, இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்தது. ஆனால், 2-ஆம் கட்ட படப்பிடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது, கொரோனா...

ஊரடங்கால் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், ஐதராபாத்தில் கடந்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது, அஜித், பைக்கில் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. 

பைக் காட்சிகளில்  தத்ரூப நடிப்பை வெளிப்படுத்துவதில் கில்லாடியானவர் அஜித். ஆனால், பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கியபோது, அஜித்தின் பைக் கவிழ்ந்தது. 

இதில் அஜித்துக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பு தொடர்பாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், ...படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் வேண்டும் என்று, படக்குழுவை நச்சரிக்கத் தொடங்கினார்கள் அஜித் ரசிகர்கள்....

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அப்டேட் கேட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் போனி கபூரைக் காணவில்லை என்றெல்லாம் போஸ்டர் ஒட்டினார்கள்.இந்நிலையில், நடிகர் விஜய்யின் 65-ஆவது படப்பிடிப்பு குறித்த தகவல் கடந்த வியாழக்கிழமை வெளியானது. 

விஜய்க்கு, மாஸ்டர் படத்தை தொடர்ந்து, அடுத்த படம் தொடர்பான அறிவிப்பே வெளியான நிலையில், வலிமை படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வராததால், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், கொந்தளிக்க தொடங்கினர்.

இத்தகைய சூழலில்தான், வலிமை படத்தின் அப்டேட் தொடர்பாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா...
அதில், "வலிமை" படத்தின் அப்டேட் குறித்து தக்க நேரத்தில் படக்குழுவினர் வெளி இடுவார்கள் என்றும், அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்குமாறும் கூறி மவுனம் கலைத்துள்ளது படக்குழு...

விஜய்யின் 65-ஆவது பட அறிவிப்பைக் கருத்தில் கொண்டே, வலிமை படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிமை என்ற பெயருக்கு ஏற்றார்போல், படத்தின் அப்டேட்களும் வலிமையாக அமைய வேண்டும் என்பதே எண்ணற்ற அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்