"பாவ கதைகள்" - ஒடிடி தளத்தில் வெளியீடு -பிரபல நடிகர்கள் பங்கேற்பு

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள "பாவகதைகள்" எனும், ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.
பாவ கதைகள் - ஒடிடி தளத்தில் வெளியீடு -பிரபல நடிகர்கள் பங்கேற்பு
x
காதல், அந்தஸ்து, கவுரவம் ஆகியவற்றை உறவுகளில், ஏற்படுத்தும் மாற்றங்களை இந்த பாவ கதைகள் வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. RSVP Movies எனும் நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை, நெட்ஃப்ளிஸ் 190 நாடுகளில் வெளியிடுகிறது. இதில், அஞ்சலி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, சிம்ரனுடன் மேலும் பலர் நடித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்