திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு
x
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், தலைவர் பதவிக்கான தேர்தலில் தேனாண்டாள் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 338 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தனியாக போட்டியிட்ட தயாரிப்பாளர் தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார். இது தவிர இதுதவிர துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வெற்றி குறித்து கருத்து தெரிவித்த தேனாண்டாள் முரளி, தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார். Next Story

மேலும் செய்திகள்