இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன்

மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன்
x
மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல் தோற்றத்தில் திருப்தி இல்லை, படப்பிடிப்பில் விபத்து என இந்தியன்-2 படப்பிடிப்புக்கு ஏற்கனவே தடைகள் ஏற்பட்டன. இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம், இந்தியன்-2 ஆகிய இரண்டு படங்களிலும் மாறி மாறி, நடிக்க கமல் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா அபாயம் நீங்கவில்லை - நடிகை ஸ்ருதிஹாசன் அச்சம்

"கொரோனா அபாயம் நீங்கவில்லை" என, 
நடிகை ஸ்ருதிஹாசன் அச்சம் தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில், "கொரோனா வைரஸ் அனைவரின் ஆரோக்கியத்திலும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது என்றும், கொரோனா அபாயம் முடிந்து விடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அரண்மனை-3 படத்திற்காக பிரமாண்டமான அரங்கு

சுந்தர் சி. இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை' படத்தின் முதல் 2 பாகங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதன் தொடர்ச்சியாக இப்போது, 'அரண்மனை-3' உருவாகி வருகிறது. இந்த படத்துக்காக சென்னைக்கு அருகே, 2 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டு, அதில் சண்டை காட்சி படமாக்கப் பட்டது. படத்தின் உச்சக்கட்ட சண்டை காட்சி 11 நாட்கள் படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்