ரசிகர்களுக்கு காட்சி தந்த ரஜினிகாந்த் - தீபாவளி பரிசால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பொது வெளியில் தோன்றிய நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ரசிகர்களுக்கு காட்சி தந்த ரஜினிகாந்த் - தீபாவளி பரிசால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
x
தீபாவளியையொட்டி, சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின் முன், அதிகாலையில் ரசிகர்கள் திரண்டனர். கொரோனா அச்சம் காரணமாக, அவர்களை உடனடியாக வீடு திரும்ப போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், ரஜினிகாந்த்தை, கை மட்டும் காண்பிக்க சொல்லுங்க என ரசிகர்கள் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, ரசிகர்களுக்கு ரஜினி நேரில் காட்சி அளித்து தீபாவளி வாழ்த்து கூறினார். ஓரிரு நிமிடங்கள் ரஜினி ரசிகர்களை கையசைத்தார். ரஜினியை பார்த்ததும், அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் விசில் அடித்தும், சப்தம் எழுப்பியும் ஆரவாரம் செய்தனர்.  
Next Story

மேலும் செய்திகள்