'மாஸ்டர்' பற்றி இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு - பட தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் தகவல்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாஸ்டர் பற்றி இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு - பட தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் தகவல்
x
நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு காரணமாக  தள்ளி போனது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் படத்தின் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும் என விஜய்யின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரையிலான காத்திருப்பு முடிந்தது, வாத்தி வருகிறார் என்ற வாசகத்துடன் பட தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு பட வெளியீட்டு தேதி அல்லது டீசர், டிரைலர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்