"எனக்கு வர வேண்டிய பணம் கிடைத்தால் போதும்" - உயர்நீதிமன்றத்தில் சூரி தரப்பில் கோரிக்கை

2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில், தனக்கு வர வேண்டிய பணம் கிடைத்தால் போதும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்..
எனக்கு வர வேண்டிய பணம் கிடைத்தால் போதும் - உயர்நீதிமன்றத்தில் சூரி தரப்பில் கோரிக்கை
x
நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். அந்த படத்தில், 40 லட்சம் ரூபாய் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் நிலம் தருவதாக தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக பெற்று இருவரும் மோசடி செய்துவிட்டதாக சூரி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், ரமேஷ் குடவாலா தனது முன் ஜாமின் மனுவை இன்று திரும்ப பெற்றார். இதையடுத்து, அன்புவேல் ராஜனின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையின் போது, தனக்கு வர வேண்டிய பணம் கிடைத்தால் போதும் என சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 26ஆம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்