சரத்குமார், கமல்ஹாசன் வீடுகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

நடிகர்கள் சரத்குமார் மற்றும் கமல்ஹாசன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
சரத்குமார், கமல்ஹாசன் வீடுகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்
x
நடிகர்கள் சரத்குமார் மற்றும் கமல்ஹாசன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். இதே நபர்தான், தமிழக, பாண்டிச்சேரி முதல்வர்கள், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகிய நடிகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதேபோல், நேற்று சரத்குமார் மற்றும் கமல்ஹாசனின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து மரக்காணத்தில் இருந்த அந்த நபரை பிடித்த வடபழனி போலீசார், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். Next Story

மேலும் செய்திகள்