சிம்பு பாம்பு பிடித்ததால் வந்த பிரச்சினை - இயக்குனர் சுசீந்தீரன் விளக்கம்

சிம்பு பாம்பு பிடிக்கும் காட்சி சர்ச்சையாகி இருப்பது தொடர்பாக, "ஈஸ்வரன்" படத்தின் இயக்குனர் சுசீந்தீரன் விளக்கமளித்துள்ளனர்.
சிம்பு பாம்பு பிடித்ததால் வந்த பிரச்சினை - இயக்குனர் சுசீந்தீரன் விளக்கம்
x
சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி வெளியானது. அக்காட்சி சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகப் பரவிய, அதே வேளையில், சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இந்நிலையில், அந்தக் காட்சி போலியான பிளாஸ்டிக் பாம்பை வைத்து படமாக்கியதாக இயக்குனர் சுசீந்தீரன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை எனவும், கணினி கிராபிக்ஸ் செய்யும் போது, கசிந்த காட்சிகள் குறித்து விசாரித்து வருவதகாவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுப்படுத்தி உள்ளதாக சுசீந்தீரன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்