தர்ஷன் Vs சனம் - அடுத்து என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் மீது நடிகை சனம் அளித்த புகாரை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்து இருக்கிறது...
தர்ஷன் Vs சனம் - அடுத்து என்ன?
x
2012 ல் வெளியான அம்புலி என்ற படத்தின் நாயகியாக அறிமுகமானவர் சனம். அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தாலும் கூட, தர்ஷன் மீதான புகாரால் தான் வெளியுலகத்திற்கு தெரியவந்தார் சனம். 

மாடலிங் துறையிலும் இருந்த சனத்துக்கு அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். அப்போது வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த தர்ஷனுக்கு போதிய பணவசதிகளை செய்து கொடுத்துள்ளார் சனம். இதனால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து ஒரு கட்டத்தில் நிச்சயதார்த்தம் வரை சென்றுள்ளது. 

இந்த சூழலில் தான் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார் தர்ஷன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தர்ஷனுக்கு பேருதவியாக இருந்ததும் சனம் தான் என்ற தகவலும் அப்போது வெளியானது. தனக்கு ஒரு காதலி இருக்கிறார் என தர்ஷன் வெளிப்படையாகவே கூறி வந்த நிலையில் தனக்கும் தர்ஷனுக்கும் இனி எதுவுமே இல்லை என பகீர் கிளப்பினார் சனம். 

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், தனக்கும் தன் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் காவல் நிலையத்தின் படியேறி சென்று சனம் அளித்த புகார் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சனம் தனக்கு செலவு செய்ததெல்லாம் உண்மை தான். ஆனால் சனத்தை பிரிய காரணம் வேறு இருக்கிறது என கூறிய தர்ஷன் மவுனம் கலைக்க மறுத்தார். 

இதனிடையே பிக்பாஸ் நடப்பு சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் நடிகை சனம். ஆனால் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் அவர். அதில் நடிகர் தர்ஷன் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதை குறிப்பிட்ட அவர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். 

அவருடைய முன்னேற்றத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்த போதிலும், தன்னை பற்றி தர்ஷன் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும் சனம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதும், நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே சனம் நீதிமன்றத்திற்கு செல்ல காரணமாக இருந்தது. 

இப்போது பிக்பாஸ் போட்டியாளராக சனம் உள்ளே உள்ள நிலையில், இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. நடிகை சனம் அளித்த  மனுவுக்கு மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தர்ஷன் மீது பதிவான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

சினிமாவில் சர்ச்சைக்குரிய ஜோடிகளான இவர்களின் வழக்கு அடுத்து என்னவாகும் என்பது காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் கையில் தான் இருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்