கருப்பு உடையில் கலக்கும் சிம்பு - கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்

கொரோனா காலத்தில் கடும் முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ள சிம்புவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கருப்பு உடையில் கலக்கும் சிம்பு - கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்
x
தோற்றத்தில் புது புது ட்ரெண்டுகளை உருவாக்கிய நடிகர் சிம்பு, சமீபத்தில் உடல் எடை கூடி ரசிகர்களை கவலையடைய செய்தார். ஒஸ்தி படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடித்த சிம்புவை , மீண்டும் ஸ்லிம்மான தோற்றத்தில் பார்க்க ரசிகர்கள் ஏங்கி வந்தனர் .இந்நிலையில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகி வைரலான நிலையில் , தற்போது கருப்பு உடையில் இருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது மாற்றத்திற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சிம்பு, எல்லாவற்றுக்கும் மேலாக தனது ரசிகர்களின் அன்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். கருப்பு உடையில் உடல் மெலிந்த சிம்புவை பார்க்கும் போது, தொட்டி ஜெயா படத்தில் பார்த்தது போல் இளமையாக இருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்