நடிகர் அருண் விஜய்-ன் புதிய தோற்றம்: "விக்டருக்கு பின் ரஞ்சித் தான்" - அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் அருண் விஜய்-ன் புதிய தோற்றம்: விக்டருக்கு பின் ரஞ்சித் தான் - அருண் விஜய்
x
நடிகர் அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜயின் புதிய தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் "ரஞ்சித்" என்ற கேரக்டரில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அருண் விஜய், "என்னை அறிந்தால்" படத்தின் விக்டர் கேரக்டருக்கு பிறகு தனது மனதுக்கு மிகவும் பிடித்த கேரக்டர் ரஞ்சித் என்று பதிவிட்டுள்ளார். மூடர் கூடம் திரைப்படத்தை இயக்கிய நவின் இயக்கும் இந்த படத்தில் அக்சரா ஹாசன், விஜய் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்