மாஸ்டர்' படத்தின் 'க்விட் பண்ணுடா' பாடல் - அனிருத் பிறந்த நாளுக்கு 'மாஸ்டர்' படக்குழுவின் பரிசு

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் மாஸ்டர்.
மாஸ்டர் படத்தின் க்விட் பண்ணுடா பாடல் - அனிருத் பிறந்த நாளுக்கு மாஸ்டர் படக்குழுவின் பரிசு
x
மாஸ்டர்' படத்தின் 'க்விட் பண்ணுடா' பாடல் - அனிருத் பிறந்த நாளுக்கு 'மாஸ்டர்' படக்குழுவின் பரிசு

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் அனிருத் பாடியுள்ள க்விட் பண்ணுடா பாடலின் லிரிக் வீடியோவை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது அனிருத் பிறந்தநாளுக்கு இந்த பாடலை படக்குழு பரிசாக  வெளியிட்டுள்ளது

சுல்தானுக்கு குரல் கொடுக்க தொடங்கிய கார்த்தி - தீபாவளிக்கு OTT-யில் வெளியாகிறது 'சுல்தான்' ?

ரெமோ இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் , கார்த்தி - ரஷ்மிகா மந்தனா ஜோடியில் உருவாகும் படம் சுல்தான். பண்டிகை நாளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. கதாநாயகன் கார்த்தி டப்பிங் செய்யும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. 

முத்தைய்யா முரளிதரனாக நடிக்க மறுத்த 'அசுரன்' டீஜே - விஜய் சேதுபதி சரியான முடிவெடுக்க வேண்டும் என கருத்து

800 திரைப்படத்தில் இளம் வயது முத்தைய்யா முரளிதரனாக நடிக்க தன்னை படக்குழு அனுகியதாகவும், ஆனால் கதையை கேட்ட பின்பு நடிக்க மறுத்ததாகவும் , அசுரன் புகழ் டீஜே தெரிவித்துள்ளார். ஈழ போர் குறித்து படத்தில் காட்சிகள் இருப்பதாகவும் ஆனால் அது சரியாக இருப்பது போல் தனக்கு தோன்றவில்லை என தெரிவித்துள்ள அவர், தனது தாயும் ஒரு ஈழ தமிழர் தான் என்றும் , படத்தில் காட்டப்படும் அரசியலில் சிக்கி கொள்ள தாம் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். படங்கள் தேர்வு செய்வதில் கவனமுடன் இருக்குமாறு தனக்கு அறிவுறுத்திய அண்ணன் விஜய் சேதுபதி, 800 படத்தில் நடிப்பது குறித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டீஜே.

சமுத்திர கனியுடன் இணைந்த சாக்‌ஷி அகர்வால் - படப்பிடிப்பு காட்சிகள் வெளியீடு

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனிடையே படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை சாக்‌ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தை பற்றிய கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயா கோஷல் குரலில் பூமி படத்தின் 2வது பாடல் - வரும் 21ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. "கடைக்கண்ணாலே" என்று தொடங்கும் இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலின் முன்னோட்ட காட்சிகளை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயம் ரவியின் 25ஆவது படமாக உருவாகும் இதனை, இயக்குனர் லக்‌ஷ்மன் இயக்கியுள்ளார்.


ஆண்ட்ரியாவின் "எழுந்து வா" பாடல்

நடிகை ஆண்ட்ரியா தான் பாடியுள்ள எழுந்து வா "என்ற பாடலை" தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் விஸ்வரூபம், தரமணி, வட சென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. இவரது நடிப்புக்கு மட்டுமின்றி பாடல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் தற்போது "எழுந்து வா" என்னும் பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். "மனிதம் நிமிர்ந்திடவே மனிதா எழுந்து வா" என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் தற்போது அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்