மீண்டும் இணையும் தனுஷ் - அனிருத் கூட்டணி : தனுஷின் 44வது படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு மீண்டும் இசையமைக்க உள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
மீண்டும் இணையும் தனுஷ் - அனிருத் கூட்டணி : தனுஷின் 44வது படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
x
நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு மீண்டும் இசையமைக்க உள்ளார் இசையமைப்பாளர் அனிருத். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தனுஷின் 44வது படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனிருத்தின் பிறந்தநாளையொட்டி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் மற்றும் சக  நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான 3, வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படத்தின் பாடல்கள் பெரும் ஹிட் அடித்த நிலையில், தற்போது மீண்டும் இணைவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்