நடிகர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது - போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தை தொடர்ந்து விசாரணை வளையத்தில் இருந்த நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
நடிகர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது - போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி
x
தோனி படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடும் மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவரின் மரணத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. பாலிவுட்டில் வாரிசு ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டார் சுஷாந்த் என பல பக்கமும் பிரச்சினை எழுந்த நிலையில் அவரது காதலியான ரியா சக்ரபோர்த்தியின் மீது புகார் அளித்தார் சுஷாந்தின் தந்தை. தன் மகனின் பணத்தை அபகரித்துக் கொண்டு மனரீதியாக அவரை சித்ரவதை செய்தார் என சுஷாந்தின் தந்தை அளித்த புகாரே ரியாவை சிக்க வைத்தது. கடந்த ஜுன் மாதத்தில் இருந்து போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்தார் ரியா. இந்த வழக்கு பின்னர் சிபிஐக்கும் மாற்றப்பட்டது. சுஷாந்துக்கு மன அழுத்த மருந்து என கூறி போதை மாத்திரைகளை கொடுத்தார் ரியா என பாலிவுட்டில் பரபரப்பு கிளம்பியது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரியாவின் செல்போன் எண்ணை போலீசார்  ஆய்வு செய்தனர்,, இந்த வழக்கை விசாரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவும் களம் இறங்கியது. ரியாவின் செல்போனை கைப்பற்றி விசாரித்த போது தான் போதைப் பொருள் கும்பலுடன் அவருக்கு இருந்த தொடர்பும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. போதைப் பொருட்களை சிகரெட்டுகளாகவும், விதவிதமான கேப்ஸ்யூல்களாகவும் மாற்றி தான் பயன்படுத்தியதோடு அதை சுஷாந்துக்கும் கொடுத்துள்ளார் ரியா. இந்த விவகாரத்தில் ரியாவின் சகோதரர் ஷோயிக், சுஷாந்த் வீட்டில் வேலை பார்த்த சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோர் ஏற்கனவே கைதாகினர். அதேநேரம் சுஷாந்தின் சகோதரி மீது ஒரு புகாரை கொடுத்தும் பரபரப்பை கிளப்பினார் ரியா. சுஷாந்தின் சகோதரியான பிரியங்கா கொடுத்த மருந்துகளையே தான் சுஷாந்திற்கு கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ரியாவிற்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். கிட்டத்தட்ட 3 நாட்களாக தொடர் விசாரணையில் இருந்த ரியாவிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது போதைப் பொருள் குறித்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி இருக்கிறார் ரியா. ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் போகவே, தான் போதைப் பொருள் பயன்படுத்தியதையும், சுஷாந்திற்கு அதை கொடுத்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். கடைசியில் ரியா சக்ரபோர்த்தியை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். நடிகை ரியா கொடுத்த தகவலின் பேரில் தான் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் போதைப் பொருள் கும்பல் கையும் களவுமாக சிக்கியது. கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராகினி மற்றும் சஞ்சனா கல்ராணியின் கைதும் ரியா சக்ரபோர்த்தி தொடர்பானது தான். இப்போது ரியா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மேலும் பலர் இந்த வலையில் சிக்கலாம் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்