நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் மீது துணை நடிகை புகார்

நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் வினோத், தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக துணை நடிகை திவ்யா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் மீது துணை நடிகை புகார்
x
நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் வினோத், தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக துணை நடிகை திவ்யா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.  
தெலங்கானா மாநிலம் காஜிப்பேட்டையை சேர்ந்த நடிகை திவ்யா, ஐதராபாத்தில் உள்ள மாநில  எஸ்.சி., எஸ்.டி. நல ஆணைய தலைவர் சீனிவாசிடம் புகார் மனு அளித்தார். வினோத்  தனக்கு பாலியல் தொல்லை  கொடுப்பதாகவும், இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் நடிகை திவ்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் பொய் விபச்சார வழக்கு போட்டு தன்னை போலீசார் சிறைக்கு அனுப்புவதாகவும் நடிகை திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்