"நீதிமன்ற உத்தரவை மீறி செயற்குழு கூட்டம் கூட்டியதாக அவமதிப்பு வழக்கு" - ஏ.எம்.ரத்னம் உள்பட 15 பேர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தில், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 15 தயாரிப்பாளர்கள் இன்று ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி செயற்குழு கூட்டம் கூட்டியதாக அவமதிப்பு வழக்கு - ஏ.எம்.ரத்னம் உள்பட 15 பேர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
x
2018  ஜூன் மாதம் நடந்த  தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவராக ஜாகுவார் தங்கம் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  நந்தகோபால், வங்கி கணக்குகளை ஜாகுவார் தங்கம் கையாளக் கூடாது என வழக்கு தொடர்ந்ததில், சங்கத்தின் வங்கி பண பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை எதிர்த்து ஜாகுவார் தங்கம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை வங்கி பரிவர்த்தனைகளை இருதரப்பும் கையாள கூடாது என  உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருதரப்பும், செயற்குழு கூட்டமோ, பொதுக்குழு கூட்டமோ  கூட்டக்கூடாது எனவும் உத்தரவிட்டது. இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஏ.எம். ரத்னம், கலைக்கோட்டுதயம், ஜம்பு, துரைசாமி, நந்தகோபால் உள்ளிட்ட 15 பேர் பலமுறை செயற்குழு கூட்டத்தை கூட்டியதாக ஜாகுவார் தங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, இன்று 15 பேரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்