மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் பாலா - விவாகரத்து வழங்கி கேரள நீதிமன்றம் உத்தரவு

வீரம் படத்தில் நடிகர் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக நடித்து கவனம் ஈர்த்தவர் பாலா.
மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் பாலா - விவாகரத்து வழங்கி கேரள நீதிமன்றம் உத்தரவு
x
வீரம் படத்தில் நடிகர் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக நடித்து கவனம் ஈர்த்தவர் பாலா. ஏற்கனவே அன்பு என்ற தமிழ் படத்தில் நடித்த இவர், இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள படங்களில் நடித்து வந்த நடிகர் பாலா, கேரளாவை சேர்ந்த பின்னணி பாடகி அம்ருதாவை காதலித்து கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற குழந்தை உள்ள நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கேரள நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்