"ரஜினிக்கு இன்னும் ரூ.500 சம்பள பாக்கி உள்ளது" - பாரதிராஜா

ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பேச விரும்பவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு இன்னும் ரூ.500 சம்பள பாக்கி உள்ளது - பாரதிராஜா
x
ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பேச விரும்பவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். வேலூரில், அம்மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் 70- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்று 70 பயனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பில்லான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ரஜினி மிகவும் எளிமையானவர் என்றும், 16 வயதினிலே படத்திற்காக பேசப்பட்ட சம்பளத்தில், இன்னும் 500 ரூபாய் அவருக்கு கொடுக்க பாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்