நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு : தீர்ப்பை தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு : தீர்ப்பை தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
x
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை  சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. நடிகர் சங்க நிர்வாக பணிகளை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை தனி அதிகாரியாக நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் தரப்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தனி அதிகாரியாக கீதாவை நியமித்தது சட்ட விரோதமானது என நடிகம் சங்கம் சார்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதி கல்யாணசுந்தரம், தேதி குறிப்பிடாமல்  தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்