ஹிந்தியில் பேச நடிகை டாப்ஸி பன்னு மறுப்பு - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

பாலிவுட்டில் நடித்தால் ஹிந்தியில்தான் பேச வேண்டுமா என நடிகை டாப்சி பன்னு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் பேச நடிகை டாப்ஸி பன்னு மறுப்பு - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ
x
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசினார். அப்போது பாலிவுட்டில் நடிக்கும் நீங்கள் ஹிந்தியில் பேச வேண்டும் என செய்தியாளர் ஒருவர் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த நடிகை டாப்சி அனைவருக்கும் இந்தி தெரியாது என்றும் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள தாம் தமிழில் பேசினால் உங்களுக்கு புரியுமா என அவரிடம் கேள்வி எழுப்பினார். தன்னை தென்னிந்திய நடிகை என பதிவு செய்த டாப்சி பன்னு தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசியதற்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்