காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.
காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்
x
ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக குமுளி அருகே வண்டிப்பெரியாறு பகுதியில் நடைபெற்ற 'பேய்மாமா' என்ற படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் கிருஷ்ணமூர்த்தி, மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலையில் காலமானார். வடிவேலு உடன் பல்வேறு படங்களில் காமடி காட்சிகளில் நடித்துள்ள கிருஷ்ணமூர்த்தி நடிகராவதற்கு முன்பு, தயாரிப்பு நிர்வாகியாக நீண்டகாலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் உடல் இன்று மாலை, சென்னை கொண்டுவரப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்