'அக்னிச்சிறகுகள்' படக்குழு ரஷ்யா பயணம்

'அக்னிச்சிறகுகள்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகருக்கு சென்றுள்ளனர்.
அக்னிச்சிறகுகள் படக்குழு ரஷ்யா பயணம்
x
அம்மா கிரியேஷன்ஸ்  தயாரிப்பில்  மூடர் கூடம்  நவீன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அருண்விஜய் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் 'அக்னிச்சிறகுகள்'. இவர்களுடன் அக்சரா ஹாசனும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . 
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகருக்கு  சென்றுள்ளனர்.  ரஷ்யாவில், படத்திற்கான சில முக்கியக் காட்சிகளையும் , சண்டைக் காட்சியையும் படமாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்