"அசுரன் படத்துக்கு பேனர், கட்-அவுட் வேண்டாம்" - நடிகர் தனுஷ் தலைமை ரசிகர் மன்றம் வேண்டுகோள்

அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக இருக்கும் 'அசுரன்' திரைப்படத்திற்கு கட் அவுட் மற்றும் பேனர் ஆகியவற்றை வைப்பதை தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு தனுஷ் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அசுரன் படத்துக்கு பேனர், கட்-அவுட் வேண்டாம் - நடிகர் தனுஷ் தலைமை ரசிகர் மன்றம் வேண்டுகோள்
x
அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக இருக்கும் 'அசுரன்' திரைப்படத்திற்கு கட் அவுட் மற்றும் பேனர் ஆகியவற்றை வைப்பதை தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு தனுஷ் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேனர் வைப்பதற்கு பதிலாக அந்த பணத்தை கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்" என்று குறிப்பிட்டு, ரசிகர் நற்பணி மன்றம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டத்தை நடிகர் தனுஷ் ஏற்றுக் கொண்டாரா என சினிமா வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்