அமிதாப் பச்சனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் அமிதாப் பச்சனுக்கு, தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது
அமிதாப் பச்சனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து
x
நடிகர் அமிதாப் பச்சனுக்கு, தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு, அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இரண்டு தலைமுறைகளாக, பாலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' என்ற உச்சநட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்து கொண்டுள்ள அமிதாப் பச்சன், 76 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் சுறுசுறுப்புடன் நடித்து வருகிறார்.

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, மகாராஷ்டிர மாநில அரசின் விருது மற்றும் மத்திய அரசின் தேசிய விருதுகளை, அமிதாப் பச்சன் பலமுறை பெற்றுள்ளார். மத்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளாலும் அமிதாப் பச்சன்  கவுரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்