"பொன்னியின் செல்வன்" படத்தில் ஜெயராம்

மணி ரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராம்
x
மணி ரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளார். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியானது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்