மருத்துவமனையில் தனது அண்ணனை சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணனை சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் தனது அண்ணனை சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினி
x
நடிகர் ரஜினிகாந்த், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணனை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனை  வளாகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள், பூங்கொத்து கொடுத்து ரஜினியை வரவேற்றனர். பின்னர், அவரின் அண்ணன் சத்தியநாராயண ராவ் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்ற ரஜினி, உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். 77 வயதான ரஜினியின் மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ், முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்