நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜித்துக்கு நடி​கை த்ரிஷா நன்றி

பெண்கள் குறித்து பேசும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்த அஜித்துக்கு நடி​கை த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.
x
பெண்கள் குறித்து பேசும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்த அஜித்துக்கு நடி​கை த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த கருத்தரங்கில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார். டிக்டாக் செயலியால் வரும் நன்மைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட நடிகை த்ரிஷா, நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்தற்காக நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்