விஷால் வழக்கு - செப்.12க்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜரானார்.
விஷால் வழக்கு - செப்.12க்கு ஒத்திவைப்பு
x
நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜரானார். அவரது வழக்கை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில், இரண்டு முறை சம்மன் அனுப்பியும், நடிகர் விஷால் ஆஜராகாததால், ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து, நீதிபதி மலர்மதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு, நடிகர் விஷால் ஆஜரானார். ஒருமணி நேரத்திற்கும் மேலாக  நீதிமன்ற வளாகத்தில் விஷால் காத்திருந்த நிலையில், அவரது வழக்கை, செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி மலர்மதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து விஷால், தமது காரில் புறப்பட்டுச் சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்