திரைத்துறைக்கு ரஜினி வந்து 44 ஆண்டுகள் நிறைவு

திரைத்துறைக்கு ரஜினிகாந்த் வந்து, 44 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவரது ரசிகர்கள், ஹேஸ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.
திரைத்துறைக்கு ரஜினி வந்து 44 ஆண்டுகள் நிறைவு
x
திரைத்துறைக்கு ரஜினிகாந்த் வந்து, 44 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவரது ரசிகர்கள், ஹேஸ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் ரஜினி அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படம் வெளியானது. 1978ல் அவர் கதாநாயகனாக அறிமுகமான 'பைரவி' வெளியானது. இந்நிலையில், திரையுலகத்தினர் ரஜினிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஆண்டுக்கு 20க்கும் மேற்பட்ட படங்களை நடித்த ரஜினி, தற்போது மிக குறைவான படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு 'பேட்ட' மட்டும் வெளியான நிலையில் அடுத்த ஆண்டு 'தர்பார்' மற்றும் சிவா இயக்கும் படம் என 2 படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்