தேசிய விருது : பிற மொழி படங்களில் பணியாற்றிய தமிழர்களுக்கு அங்கீகாரம்

கடந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்படங்களை பின்னுக்கு தள்ளி மற்ற மொழி படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
தேசிய விருது : பிற மொழி படங்களில் பணியாற்றிய தமிழர்களுக்கு அங்கீகாரம்
x
கடந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்படங்களை பின்னுக்கு தள்ளி மற்ற மொழி படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இருப்பினும் மற்ற மொழிப்படங்களில் பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சானிடரி நாப்கின் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பேட் மேன் படத்திற்கு சிறந்த சமூக பிரச்சினைகளை பேசிய சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது. சிறந்த இந்தி மொழி திரைப்படமாக தேர்வாகி உள்ள அந்தாதுன் திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவனும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். சிறந்த திரைக்கதைக்கான விருதை நடிகரும், பிரபல பின்னணி பாடகி சின்மயியின் கணவருமான ராகுல் ரவீந்திரன், சீலா சவ் என்ற தெலுங்கு படத்திற்காக பெற்றுள்ளார். கன்னட மொழி படமான நதிச்சரமி படத்துக்காக சிறந்த பின்னணி பாடகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிந்து மாலினியும் சென்னையை பூர்வீமாக கொண்டவர். இவர் தமிழ் திரைப்படமான அருவி என்ற படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்