நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு...

நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
x
சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான 'விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம்' உள்ளது. இந்த நிறுவன ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை கடந்த 5 ஆண்டுகளாக வருமான வரித் துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள்  செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து வருமான வரித்துறை பலமுறை விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் அளிக்காததால், எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட எழும்பூர்  நீதிமன்றம், ஆகஸ்ட் 2ம்  தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வருமான வரித் துறை அனுப்பிய சம்மன்  வரவில்லை என்றும்,நேரில் ஆஜராவதிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என்றும் வாதாடினர். இதற்கு வருமான வரிதுறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத பிடி வாரண்ட் உத்தரவை பிறப்பித்து வழக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு  நீதிபதி தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்