நாடக நடிகர்கள் 62 பேர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் : நடிகர் சங்க தலைவர் நாசரிடம் சங்கங்களின் பதிவாளர் விசாரணை

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த நாடக நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் சங்கங்களின் பதிவாளர் விசாரணை நடத்தினார்.
நாடக நடிகர்கள் 62 பேர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் : நடிகர் சங்க தலைவர் நாசரிடம் சங்கங்களின் பதிவாளர் விசாரணை
x
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தொழில் முறை உறுப்பினர்களாக இருந்த நாமக்கல் நாடக நடிகர்கள் 62 பேரை தொழில் முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகளிடம் சங்கங்களின் பதிவாளர் விசாரணை நடத்தினார். இதற்காக நடிகர் சங்க தலைவர் நாசர், பூச்சி முருகன் உள்ளிட்டோர் சங்க பதிவாளர் அலுவககத்திற்கு இன்று காலை வந்திருந்தனர். அப்போது உறுப்பினர்கள் மாற்றம் செய்யப்பட்டது குறித்து நாசரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இது தொடர்பாக நீதிமன்றம் கேட்டிருந்த சில ஆவணங்களை சங்கங்களின் பதிவாளரிடம் சங்க நிர்வாகிகள் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்