"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
x
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் நடித்துள்ள படம், காப்பான். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யாவின் கருத்தை, தான் ஆமோதிப்பதாக கூறினார். புதிய கல்வி கொள்கை பற்றி, தான் பேசியிருந்தால் பிரதமர் மோடிக்கே கேட்டிருக்கும் என சிலர் சொல்கிறார்கள் என கூறிய ரஜினிகாந்த், சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது என தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியதற்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்