தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு
பதிவு : ஜூலை 21, 2019, 09:47 PM
தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பல்வேறு பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னை வடபழனியில் நடைபெற்றது. வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி சுமார் ஆயிரத்து 386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி பி வித்யாசாகர் 100 வாக்குகளை மட்டுமே பெற்றார். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் வெற்ளி பெற்றனர். சுந்தர் சி, ஏகாம்பவானன், லிங்குசாமி, சித்ரா லட்சுமணன் ஆகியோர் இணை செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்கனவே பொதுச்செயலாளராக ஆர்வி.உதயகுமாரும், பொருளாளராக பேரரசும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.செல்வமணி, உறுப்பினர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

பிற செய்திகள்

எ கொயட் ப்ளேஸ்" பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்

எ கொயட் ப்ளேஸ் 2 படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது.

10 views

பாலிவுட் பாட்ஷாக்களை விஞ்சும் ஆயுஷ்"மான்"

பாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும் வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன.

20 views

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா

'பூமராங்' படத்திற்குப் பிறகு, மீண்டும் அதர்வாவை இயக்கி வருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன்.

15 views

கவர்ச்சியை கைவிட்டதால் ஓவியா புதுமுயற்சி

நடிகை ஓவியாவுக்கு களவாணி 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

25 views

கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் சுல்தான்

நடிகர் கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

13 views

உலக அளவில் ட்ரெண்டான #SaveSpiderman

ஸ்பைடர்மேனை காப்பாற்ற துடிக்கும் ரசிகர்கள்..

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.