நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் ஸ்ரேயா

"சண்டக்காரி தி பாஸ்" திரைப்படம் மூலம் நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார், நடிகை ஸ்ரேயா.
நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் ஸ்ரேயா
x
"சண்டக்காரி தி பாஸ்" திரைப்படம் மூலம் நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார், நடிகை ஸ்ரேயா. இது மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், திலீப் - மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற "மை பாஸ்" படத்தின் ரீமேக் ஆகும்.  ஆர். மாதேஷ் இயக்கத்தில் உருவாகும் "சண்டக்காரி தி பாஸ்"  படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனின் நடைபெற்றது. தற்போது கேரளாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்