நடிகர் சங்க தேர்தல் விவகாரம் - விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று விஷால் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் விவகாரம் - விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
x
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு , நீதிபதி ஆதிகேசவலு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,நடிகர் சங்க தேர்தலில் தலையிட சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார். எனவே, பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிடக் கோரினார்.இதனைக் கேட்ட நீதிபதி, வழக்கு நிலுவையில் உள்ளதால் ஓட்டுகளை எண்ண அனுமதிக்க முடியாது என கூறி கோரிக்கையை நிராகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்