ரஜினியின் 'தர்பார்' கதையை சொன்ன எஸ்.பி.பி.

தர்பார் படத்தில் ரஜினியின் அறிமுக பாடலை தான் பாடி இருப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
ரஜினியின் தர்பார் கதையை சொன்ன எஸ்.பி.பி.
x
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில், ரஜினியின் அறிமுக பாடலை தான் பாடி இருப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். அந்த படத்தில், கடமை தவறாத போலீஸ் அதிகாரியான ரஜினிக்கு, மக்கள் பாராட்டு விழா எடுக்கும் போது, போலீஸ் உடையை கழற்றினால் நானும் உங்களில் ஒருவன் தான் என்று ரஜினி வசனம் பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வரும் அறிமுக பாடலையே தான் பாடியிருப்பதாக எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியின் அறிமுக பாடலை எஸ்.பி.பி. பாடியிருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்