விஷால் மீதான ரூ.1 கோடி வரி ஏய்ப்பு வழக்கு - ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஒரு கோடி ரூபாய் சேவை வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர் விஷால் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விஷால் மீதான ரூ.1 கோடி வரி ஏய்ப்பு வழக்கு - ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
கடந்த 2016 ஆம் ஆண்டு, சேவை வரித்துறையினர் நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சோதனை செய்தபோது, அவர் ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல முறை சம்மன் அனுப்பியும் எந்த வித பதிலையும் விஷால் தரவில்லை. இதேபோல சேவை வரி அலுவலகத்திலும் அவர் ஆஜராகவில்லை. எனவே, விஷால் மீது அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான விஷால்,  தொடர்ந்து பல முறை ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இன்று ஆஜராக சம்மன் அனுப்பபட்ட நிலையில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஹெர்மிஸ் முன்பு, விஷால்  ஆஜரானார்.இந்த வழக்கில் மீண்டும் குறுகுகு விசாரணை நடத்துவதற்கான வழிமுறை குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்