இயக்குனர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா...

இயக்குனர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளார்.
x
இயக்குனர் சங்க தலைவர் பதவியில் இருந்து  பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளார். இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பிறகு மற்ற பதவிகளுக்கான  தேர்தல் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தேர்தலில் போட்டியிடாமல் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏற்படும் சங்கடங்களை தாம் அறிவதாக கூறியுள்ளார். தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுவதற்காக தாம்  ராஜினாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்