நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு
x
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கு தீர்ப்பில் தலையிட முயன்றதாக, ஐசரி கணேஷ் மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். முன்னதாக, நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ், அனந்தராமன் என்பவர் மூலம் தம்மை அணுகியதாக நீதிபதி தெரிவித்தார். தமது வழக்கில் தலையிட முயன்றார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து, இருவருக்கு எதிராகவும், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த வழக்கு தொடர்பாக, நான்கு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமனுக்கு,  நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்