தபால் வாக்குப்பதிவுக்கு கால அவகாசம் தேவை - பாண்டவர் அணி கோரிக்கை

தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீட்டித்து வழங்க வேண்டும் என பாண்டவர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
தபால் வாக்குப்பதிவுக்கு கால அவகாசம் தேவை - பாண்டவர் அணி கோரிக்கை
x
நடிகர் சங்க தேர்தலில் நடிகர்கள் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ரமணா,  பசுபதி ஆகியோர் ஓய்வு பெற்ற நீதிபதியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பத்மநாபனை சந்தித்து, தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீட்டித்து வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.அதில், பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு சரிவர சென்றடையவில்லை எனத் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்