நடிகர் சங்க தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை..? - ரஜினிகாந்த் விளக்கம்

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க இயலாதது குறித்து நடிகர் ரஜினிகாந்த விளக்கமளித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை..? - ரஜினிகாந்த் விளக்கம்
x
மும்பையில் படப்பிடிப்பில் இருக்கும் அவர், நடிகர் சங்க தேர்தலுக்காக முன்னதாகவே தபால் வாக்கினை பெற முயற்சி செய்ததாகவும், ஆனால் இன்று மாலை 6.45 தான் தன்னிடம் தபால் வாக்குச்சீட்டு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். தபால் வாக்குகளை மாலை 5 மணிக்குள் பதிவு செய்யவேண்டும் என்ற நிலையில், தான் வாக்கு செலுத்த முடியாததற்கு ரஜினிகாந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நிகழ்ந்திருக்க கூடாது என சமூக வலைதளத்தில் ரஜினிகாந்த பதிவிட்டுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்