நடிகர் சங்க தேர்தல் - தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நடிகர் சங்க தேர்தல் - தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம்
x
சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் நடைபெற்ற இந்த  ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், சென்னை கிழக்கு இணை ஆணையர் ஜெயகவுரி, மயிலாப்பூர் ஆணையர் மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பாண்டவர் அணி சார்பில் நாசர், சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாசர், நடிகர் ரஜினிகாந்திற்கு மட்டுமல்ல பல பகுதிகளுக்கும் வாக்குச்சீட்டுகள் தாமதமாக சென்றிருப்பதாக தெரிவித்தார். கடைசி நேரம் என்பதால், வாக்குப்பதிவு குறைய வாய்ப்பிருப்பதாக பாக்யராஜ் குறிப்பிட்டார். தன் மீது நீதிபதி ஒருவர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்திருப்பது, தமக்கு வருத்தத்தை அளிப்பதாகவும், இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஐசரி கணேஷ் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்